அறிவுத்திறன் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2015

அறிவுத்திறன் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி


அறிவுத்திறன் சார்ந்த போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க, சிறப்பு பயிற்சி நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது.
மாணவர்களின் தனித்திறன் மற்றும் பொது அறிவை வளர்ப்பதற்கு, அரசு பள்ளிகளில் போதிய பயற்சியின்மையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.இதில், மிக குறைவான சதவீதத்தில் இருப்பது துவக்க மற்றும் நடுநிலை மாணவர்களே. இதை தவிர்க்கும் வகையில், மாணவர்களின் திறமையை அடிப்படை வகுப்பு முதலே வளர்க்கும் விதமாக, வரும் கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு அமைப்புகள் சார்பில், குழந்தைகளுக்கான அறிவுத்திறன், கல்வி இணை செயல்பாடு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. 10:1 என்ற வீதத்தில் கூட, அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பதில்லை. இந்நிலையை மாற்றும் வகையில், மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதிலும், போட்டிகளில் அவர்களை ஈடுபடுத்தும் வகையிலும், சிறப்பு பயிற்சிஅளிக்க, ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.சில பள்ளிகளில், பொது அறிவு மற்றும் அன்றாட நடப்புகளை அறிந்து கொள்ளும் விதமாக, மாணவர்களுக்கு நாள்தோறும் சிறப்பு பயிற்சி அளித்து போட்டி நடத்தப்படுகிறது. வெற்றி பெறுவோருக்கு, பரிசு வழங்கி ஊக்கப்படுத்துகின்றனர். இந்நடைமுறையை, அனைத்து அரசு பள்ளிகளிலும் பின்பற்றலாம். இதுதொடர்பான சிறப்பு பயிற்சியை கட்டாயமாக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி