மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்தவில்லை என்றால், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மழலையர் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுக்க அரசு தரப்பில் மேலும் 6 மாத காலம் அவகாசம் கோரப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பலமுறை உத்தரவு பிறப்பித்தும் அரசு அதனை இறுதி செய்யவில்லை என்று கூறினர்.மேலும் அங்கீகாரம் பெற்ற மழலையர் பள்ளிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட விதிகளை அரசு வகுக்க வேண்டும் என்றும், அடுத்தகட்ட விசாரணையின் போது இந்த விதிகள் வகுக்கப்படாவிட்டால், தமிழக பள்ளிக் கல்வித் துறைசெயலாளர் சபீதா, ஜூன் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி