சர்க்கசில், 50 ஆண்டுகளாக கோமாளி வேடமிடும் கலைஞரை கவுரவிக்கும் வகையில், சக கலைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா, பாலக்காட்டில் உருக்கமாக நடந்தது.
பாலக்காடு ஸ்டேடியம் மைதானத்தில், கிரேட் பாம்பே சர்க்கஸ் நடந்து வருகிறது. இந்த சர்க்கசின் நட்சத்திர கலைஞர்களில் முக்கியமானவர், 63 வயது துளசிதாஸ் சவுத்ரி. மூன்றடி உயரம் மட்டுமே கொண்ட இவர், சர்க்கசில் இணைந்து, 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.அதைக் கொண்டாடும் வகையில், சக கலைஞர்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில், கேக் வெட்டிய துளசிதாஸ், 50 ஆண்டாக, சர்க்கசில் கோமாளி வேடமிடும் அனுபவம் பற்றி, மனம் திறந்து பேசினார். அவர், பிறரை மகிழ்விப்பதை மட்டுமே கண்டிருந்த சக கலைஞர்கள், அவரது சொந்த வாழ்க்கையின் சோகங்களை கேட்டதும், கண்ணீர் மல்கினர்.பீகார் மாநிலம், சப்ரா மாவட்டத்தை சேர்ந்த துளசிதாசுக்கு, ஐந்து சகோதரர்கள். அவர்களில், துளசிதாஸ் மட்டுமே குள்ளமானவர். கோல்கட்டாவில் வியாபாரம் செய்து வந்த தந்தையின் மரணம், அவர்களது குடும்ப பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது.
அத்தகைய நிலையில்தான், ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சவுத்ரிக்கு, 'கிரேட் பாம்பே சர்க்கசை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகே, அவர் சர்க்கசில் சேர முடிவெடுத்தார்; வீட்டார் எதிர்ப்பை மீறி, சர்க்கசிலும் சேர்ந்தார்.ஆரம்ப காலத்திலேயே எல்லா பயிற்சியும் கற்றுக்கொண்ட அவர், மற்ற வேலைகளைக் காட்டிலும், சர்க்கஸ் கூடாரமே தான் பணிபுரிய ஏற்ற இடம் என்று உறுதியாக முடிவு செய்து விட்டார். அதற்கு அவரது உயரமே, முக்கிய காரணம்.
துளசிதாஸ் சவுத்ரி கூறுகையில், ''கை விரல்கள் அசைக்க முடியாத காரணத்தால் உயரத்தில் நின்று செய்யும் பயிற்சிகள் செய்ய முடியாது. அப்படியும் சர்க்கஸ் கலைகளை கற்றுக் கொண்டேன். முழு நேரமும் சர்க்கசில் மூழ்கியிருந்த காரணத்தால் திருமணமும் செய்யவில்லை. மற்றவர்களை சிரிக்க வைப்பதாலோ என்னவோ, என் வாழ்க்கையில் சிரிப்பு என்பதே இல்லாமல் போய் விட்டது,'' என்றார்.
கிரேட் பாம்பே சர்க்கசில் முக்கிய நகைச்சுவை நட்சத்திரமான, 63 வயது துளசிதாஸ் சவுத்ரி, 'ஹம்சா ப்கா தில் ஹே', 'கிருஷ்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி