அஞ்சல் வழியில் பி.எட். படிக்கும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய சலுகை: பணியாற்றும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2015

அஞ்சல் வழியில் பி.எட். படிக்கும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய சலுகை: பணியாற்றும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் பி.எட். படித்தால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம்.
அதுமட்டுமல்லாமல், பி.எட். பட்டம் பெற்றால் அவர் களின் உயர் கல்வித்தகுதியை கருத்தில்கொண்டு ஒரு ஊக்க ஊதி யம் (இன்சென்டிவ்) வழங்கப்படும்.எனவே, அரசு பள்ளியிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியிலோ இடைநிலை ஆசிரி யர், சிறப்பாசிரியர் பணியில் சேருவோர் பணியில் இருந்தவாறே அஞ்சல்வழியில் பி.எட். படிப் பது வழக்கம். இப்படிப்பை பல பல்கலைக்கழகங்கள் வழங்கு கின்றன. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் கள் அஞ்சல்வழியில் பி.எட். படிக் கும்போது அதற்கான கற்பித்தல் பயிற்சியை தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே பெறலாம்.ஆனால், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அதுபோன்று தாங் கள் பணியாற்றும் பள்ளியில் கற்பித்தல் பயிற்சியை எடுக்க முடியாது.

இதற்காக அவர்கள் வேறு பள்ளிகளைத் தேர்வுசெய்து பயிற்சி பெற்று வரும் நிலை இருந்து வருகிறது. இதனால், அவர்கள் தங்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பாதிக்கப்படும். அப்பள்ளி ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளியாக இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.இதையடுத்து, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆசிரி யர்களைப் போன்று நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் பி.எட். படிப் புக்கான கற்பித்தல் பயிற் சியை அவர்கள் பணிபுரியும் பள்ளி யிலேயே 6, 7, 8-ம் வகுப்புகளில் மேற்கொள்ள அரசு அனுமதி அளித் துள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறைமுதன்மைச் செயலர் டி.சபீதா பிறப்பித்துள்ளார்.

தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சியை அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கிற பள்ளியில் பெறலாம் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி