சுகாதாரத்துறையில் 4 ஆண்டுகளில் 8,945 பேர் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2015

சுகாதாரத்துறையில் 4 ஆண்டுகளில் 8,945 பேர் நியமனம்


சுகாதாரத்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் 8,945 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:இந்தியாவிலேயே முதல்முறையாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தை உருவாக்கியது தமிழகம்தான். இந்த வாரியம் மூலம் இதுவரை 6,923 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாரியத்தை ஏற்படுத்து வதற்கு முன்பாக இடஒதுக்கீடு முறையில் பணியமர்த்தப்பட்ட 2,022 பணியாளர்கள் உட்பட கடந்த 4 ஆண்டுகளில் 8,945 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.காலிப் பணியிடங்கள், பணி ஓய்வு மூலம் ஏற்பட்டவை அல்ல. புதிதாக உருவாக்கப்படும் தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்புதியதாக உருவாக்கப்படும் பணியிடங்களால் உருவானவை.

முதுநிலை மருத்துவர்கள் தேர்வை எளிமைப் படுத்தும் விதமாக, ஆன்லைனில் விண்ணப்பிக்க செய்து, நேரடியாக பணி ஆணை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் இதுவரை 433 ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மூலம் தொலைநோக்கு திட்டம் 2023-ன்படி காலிப்பணியிடம் இல்லாத துறையாக சுகாதாரத்துறை விளங்கும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி