வாக்காளர் பட்டியலில் திருத்தம், ஆதார் எண் இணைப்பு போன்றவற்றுக்காக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இந்த முகாம் நடைபெற்றது.
இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், புதிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றுக்காக ஏராளமானோர் விண்ணப்பித்தனர். வாக்குச்சாவடி மையங்களில் ஆதார் எண் இணைப்புக்காக ஆதார் அடையாள அட்டையுடனும் ஏராளமானோர் இந்த முகாம்களுக்கு வந்தனர்.
அடுத்தகட்டமாக, ஏப்ரல் 26-ஆம் தேதியும், மே 10, 24 ஆகிய நாள்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், அவர்களது ஆதார் விவரங்களும் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும்.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தைக் கண்காணிக்க 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று முதல் நான்கு மாவட்டங்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆதார் இல்லாவிடில்...:
ஆதார் அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு, தேசிய வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ததற்கான பதிவெண்ணோ, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான "டின்' எண்ணோ இருக்கும்.
இந்த எண்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படும். அதன் பின், அவர்கள் ஆதார் அட்டையைப் பெறும்போது அதற்கான விவரம், தேர்தல் ஆணைய கணினியில் தானாகவே தெரியவரும்.
அதைக் கொண்டு வாக்காளர் பட்டியலில் ஆதார் விவரங்கள் இணைக்கப்படும்.
ஆதார் விவரத்தை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணியை மே 31-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி