திருச்செந்தூர் அருகே ஆசிரியைக்கு பணிமாறுதுல் ஆணை கிடைத்தும், 11 மாத ஊதியம் கிடைக்கவிடாமல் அலைக்கழிக்கும் உதவி தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பெ.சக்திவேலன் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்துள்ள மனு :
திருச்செந்தூர் அருகேயுள்ள தளவாய்புரம் பொது நல ஐக்கிய சங்க தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றுபவர் கலாவதி. இவர் திருச்செந்தூரில் உள்ள செந்தில்முருகன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கிய பணி மாறுதலுக்கான உத்தரவின் அடிப்படையில் இவர் அப்பள்ளியிலிருந்து 9.6.2014ல் பணிவிடுப்பு செய்யப்பட்டார். ஆனால் இவரது பணிப்பதிவேட்டில் பணிவிடுவிப்பிற்காக மேலொப்பம் இட திருச்செந்தூர் உதவி தொடக்க அலுவலர் சுடலைமணி தகுந்த காரணமின்றி இதுவரை மறுத்து வருகின்றார். இதனால் கடந்த 11 மாதங்களாக ஆசிரியர் கலாவதி ஊதியம் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளாரம், ஸ்ரீமூலக்கரை உள்ளிட்ட பல ஊர்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிமாறுதல் மூலம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து ஆசிரியைக்கு ஊதியம் வழங்கிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி