மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா வெளியிட்ட உத்தரவு:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள கல்யாணி மதிவாணனின் பதவிக் காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புதிய துணைவேந்தராக மூன்று பேரின் பெயர்களை பரிந்துரைக்க, மூன்று பேரைக் கொண்ட தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஆளுநர்-வேந்தரின் பிரதிநிதியாகவும், குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் சி.முருகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார். பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக சென்னையைச் சேர்ந்த ஹர்ஷ் எல். மேத்தாவும், செனட் சபை உறுப்பினராக மு.ராமசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர் என உயர்கல்வித் துறைச் செயலாளர் அபூர்வாவின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவுக் குழுவானது, மூன்று பேரின் பெயர்களை அவர்களது தன்விவரக் குறிப்புகளுடன் ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். மூன்று பேரில் ஒருவரின் பெயர், ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவர் புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக் கொள்வார் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி