எஸ்ஐ பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2015

எஸ்ஐ பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்


தமிழகத்தில் காலியாக உள்ள எஸ்ஐ பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்காக அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது.இதனை சென்னை காவல்துறை குற்றவியல் பிரிவு இணை ஆணையர் ஜெயகுமார் தொடங்கி வைத்துப் பேசினார்.
தமிழகத்தில் காலியாக உள்ள எஸ்ஐ பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்காக சென்னை டாக்டர் அம்பேத் கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு நேற்று தொடங் கியது.

இதுகுறித்து, அம்மையம் வெளியிட்ட அறிக்கை:

தமிழக காவல் துறையில் 1078 உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) பணி யிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதற்கான போட்டித் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு டாக்டர் அம்பேத் கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இலவச வகுப்புகளை நடத்துகிறது. இந்த வகுப்பு நேற்று சென்னையில் தொடங்கியது.

தொடர்ந்து ஒரு மாதம் நடைபெற உள்ள இந்த பயிற்சி வகுப்பை சென்னை காவல்துறை குற்றவியல் பிரிவு இணை ஆணையர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி, காப்பீட்டுக்கழகம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ஜானகிராமன், ஜெயராமன், அம்பிகா, கவிமணி, கங்காதரன், வகுப்பாசிரியர் ஜெயாஜான், பயிற்சி மையத்தின் அமைப்பாளர்கள் வாசுதேவன், கிருஷ்ணா ஆகியோர் பேசினர்.இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி