சர்வதேச கீதை போட்டியில் முதல் பரிசு பெற்று இஸ்லாமிய பள்ளி மாணவி சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2015

சர்வதேச கீதை போட்டியில் முதல் பரிசு பெற்று இஸ்லாமிய பள்ளி மாணவி சாதனை


மரியம் சித்திக் என்ற 12 வயது இஸ்லாமிய பள்ளி மாணவி சர்வதேச கீதை போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்து உள்ளார்.இஸ்கான் அமைப்பு சர்வதேச அளவில் பகவத் கீதை பற்றிய போட்டி ஒன்றை நடத்தியது.
இதில் கலந்து கொள்ள மும்பையை சேர்ந்த பள்ளி ஒன்றின் மாணவர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 6-ம் வகுப்பு படிக்கும் மரியம் சித்திக் என்ற மாணவியும் போட்டியில் கலந்து கொண்டார். மொத்தம் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட போட்டியில் மரியம் முதல் பரிசை வென்றுள்ளார்.இது பற்றி மரியம் கூறும்போது ‘‘எனக்கு எப்போதும் மதங்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. எனவே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தேன். இதற்கு எனது குடும்பமும் ஆதரவு அளித்ததுடன் உதவியாகவும் இருந்தது.அதிகமாக மதநூல்களை படிக்கும்போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது, அது நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கியமான மதம் மனித நேயம் தான்’’ என தெரிவித்துஉள்ளார்.

மரியத்தின் தந்தை கூறும்போது ‘‘அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும்என்பதை எங்கள் குடும்பத்தினர் உறுதியாக நம்புகிறோம். எந்த மதமும் வெறுப்பை போதிக்கவில்லை. ஆனால் சிலர் நம்முடைய குழந்தைகளை தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள். அதை தடுத்து அவர்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டியது நம்முடைய கடமை’’ என தெரிவித்துள்ளார்.

8 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி