சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரக் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2015

சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரக் கோரிக்கை


சிறப்பாசிரியர்களின் போட்டித் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட ஊதியத்தை நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வங்கி வரைவோலையாக வழங்கியதற்கு சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதேபோல, பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் கலைஆசிரியர் சங்கம் முதல்வரின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சிறப்பாசிரியர்களுக்கான ஓவியத் தேர்வு பாடத்திட்டம் மிகவும் கடுமையாக உள்ளதால் இப்பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஏற்கெனவே முதல்வரின் தனிப்பிரிவிற்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பாசிரியர் பணி நியமனத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, தேர்வுத் துறையில் தொழில்நுட்பத் தேர்வு தேர்ச்சி, பள்ளிக் கல்வி இயக்குநரால் நடத்தப்படும் டிடிசி எனப்படும் தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி என்பவற்றின் அடிப்படையில் நியமனம் என்பதே நடைமுறையாகும்.ஆனால், தற்போது போட்டித் தேர்வு முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதால் இதற்கான போட்டித் தேர்வு பாடத்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஓவியப் பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் கிடைப்பதில்லை.இந்நிலையில், சிறப்பாசிரியர்களுக்கு போட்டித் தேர்வு ஜுன் மாதத்தில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கலை ஆசிரியர் நலச் சங்கத்தின் சார்பில் முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அரசு செயலர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தாங்கள் படித்த படிப்பிற்கு தொடர்பில்லாத பாடத் திட்டம் இப்போட்டித் தேர்வில் இடம் பெறக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இப்பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாவிட்டால் போட்டித் தேர்வை நீக்கிவிட்டு, மாநிலப் பதிவு முன்னுரிமையை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. first exam date solluinga.ellana evinga sangam sangamnu sollittu epdi joke adippaainga.16000+ dobaakkoor workers name list and mark list avaingna yaar yaar yavalo panam yaarttalam kuduththainga antha list viduinga.evinga esttaththukku posting poduinganu sonna court yathukku erukku summa vedikka paakkava erukku.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி