கல்விக்கு முக்கியத்துவம்: தலித் சமூகத்திற்கு அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2015

கல்விக்கு முக்கியத்துவம்: தலித் சமூகத்திற்கு அழைப்பு

"அம்பேத்கரின் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாததால், தலித் சமுதாயம், இன்று பல பிரச்னைகளால் அவதிப்படுகிறது. கோவில்களுக்கு செல்வதை புறக்கணித்து, கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும்படி கூறியிருந்ததை, தலித் சமுதாயத்தினர், பின்பற்றவில்லை,” என, சிறு தொழில்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி தெரிவித்தார்.

பெங்களூரு தூர்தர்ஷன் மையத்தில், எஸ்.சி., - எஸ்.டி., ஊழியர்கள் நல அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்த அம்பேத்கர் ஜெயந்தியை, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி துவக்கி வைத்து பேசியதாவது: தலித்துகள், கோவில்களில் பூஜை செய்யும் சம்பிரதாயத்தை புறக்கணித்து, அந்த பணத்தை கல்விக்கு செலவழிக்கும்படி, அம்பேத்கர் ஆலோசனை கூறியிருந்தார். ஆனால், இன்று தலித் சமுதாயத்தினர், கோவில், பூஜை என்று கல்வியை மறந்து விடுகின்றனர். அம்பேத்கர், வெறும் தலித் சமுதாயத்தினருக்கு மட்டும் சொந்தமானவரல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை, 1931ல், அனைத்து சமுதாயத்தினருக்கும் கொடுத்ததன் மூலம், சமமான சமுதாயம் கொடுக்க முயற்சித்தார். அம்பேத்கர், புத்தர், பசவண்ணர் போன்ற மகான்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வாழ, முன்வர வேண்டும். இடஒதுக்கீடு லாபம் பெற்ற அரசியல் பிரதிநிதிகள், அதிகாரிகள், தங்கள் சமுதாயத்தின் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்படி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி