விளையாட்டு விடுதிகளுக்கு மே 2 ல் மாணவர்கள் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2015

விளையாட்டு விடுதிகளுக்கு மே 2 ல் மாணவர்கள் தேர்வு


தமிழகத்தில் 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. இங்கு வரும் கல்வியாண்டில் 7,8,9,11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக், நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், குத்துசண்டை விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
இதற்காக மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்வு செய்யும் பணி மே 2 முதல் 5 ம் தேதி வரை நடக்கிறது. மே 2ல்ராமநாதபுரம்,தர்மபுரி, நீலகிரி, நாகர்கோவில், மதுரை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கடலூர், திருவள்ளூர், சேலம், பெரம்பலூரிலும், மே 3 ல் சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர், திருவாரூர், விழுப்புரம், ஈரோடு, அரியலூரிலும், மே 4 ல் விருதுநகர், திருவண்ணாமலை, கோவை, திருநெல்வேலி, தேனி, திருச்சி, சென்னை, தஞ்சாவூர், வேலூர், நாமக்கல் மாவட்டங்களிலும் நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி