நேதாஜியின் ரகசிய கோப்புகள் வெளியிட கமிட்டி அமைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2015

நேதாஜியின் ரகசிய கோப்புகள் வெளியிட கமிட்டி அமைப்பு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்புடைய ரகசிய கோப்புகளை வெளியிடுவதற்கு, கமிட்டி அமைக்கப்படுகிறது.கடந்த 1945, ஆகஸ்ட் 18ம் தேதி, தைவானில் நேதாஜியை கடைசியாக பார்த்ததாகவும், அதன் பின் அவர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
விமான விபத்தில் நேதாஜி இறந்திருக்கலாம் என்று கூறப்படுவதை, பலர் ஏற்கவில்லை. நேதாஜி குறித்த உண்மை தகவல்கள் அடங்கிய, 160 ரகசிய கோப்புகள் அரசிடம் உள்ளது. இந்த கோப்புகளை வெளியிட்டால் தான், நேதாஜியின் வாழ்க்கை குறித்து அனைவரும் அறிய இயலும். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு, ஜெர்மனி தலைநகர் பெர்லினில், நேதாஜியின் கொள்ளுப் பேரனான சூர்யகுமார் போஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, நேதாஜியுடன் தொடர்புடைய அனைத்து ரகசிய கோப்புகளையும் உடனடியாக வெளியிடும்படி கோரினார். மேலும், நேதாஜியின் குடும்பத்தினரை, நேரு உளவு பார்த்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய போஸ், அதுகுறித்த அறிக்கையையும் அளிக்கும்படி கேட்டுள்ளார்.

நேதாஜியின் வாழ்க்கையில் உள்ள உண்மைகளை அறிய ஆவலாக உள்ள, பிரதமர் மோடியும், சூர்யகுமார் போசின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அரசாங்க ரகசிய சட்டத்தை பரிசீலித்து, நேதாஜி குறித்த ரகசிய கோப்புகளை வெளியிடுவதற்கு, மத்திய அரசு ஒரு கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டியில், பிரதமர் அலுவலகம், ரா, ஐ.பி., உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடம் பெறுவர். இவர்கள், எந்தெந்த ஆவணங்களை வெளியிடலாம் என்பது குறித்து முடிவு செய்வர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி