போலி சான்றிதழ் வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2015

போலி சான்றிதழ் வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பார் கவுன்சிலில், வழக்கறிஞர்களாக விண்ணப்பித்தவர்களில் சிலர், போலி பல்கலை சான்றிதழ் கொடுத்து சிக்கினர்.
இந்த வழக்கில், பா.ம.க., மாநில மகளிர் அணி துணை தலைவியாக இருந்ததாக கூறப்படும், சண்முகசுந்தரி, 32. அவருக்கு உடந்தையாக இருந்த கணேஷ் பாபு, மற்றும் இவர்களிடம் போலி சான்றிதழ் வாங்கிய, அருண்குமார் ஆகியோர், சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்த, ஐந்து நாள் அனுமதி கேட்டு, உயர் நீதிமன்றத்தில் போலீசார் மனு செய்தனர். இந்த நிலையில், சண்முகசுந்தரிக்கு பின்னணியில், போலி சான்றிதழ் தயாரிக்கும் மிகப்பெரிய கும்பல் செயல்படுவது தெரிய வந்தது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு, உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றி உத்தரவிட்டனர். மூன்று பேரையும், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர், ஜெயகுமார் தலைமையிலான போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி