இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2015

இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு


இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் வகையில் மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் கணிப்பொறி ஆசிரியர்கள் மூலம் செய்து வருவதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வியாழக்கிழமை கூறுகையில், அரசு மற்றும் உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அதில், அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான இலவச பயண அட்டைகள் வழங்கும் திட்டமும் ஆகும்.மேலும், நிகழாண்டில் பள்ளி தொடங்கிய உடன் முன் கூட்டியே இலவச பயண அட்டை வழங்கவும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகளின் விவரம் அனைத்தும் கணிப்பொறியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படஇருக்கிறது. இப்பணியை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணிப்பொறி ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்தாண்டு வரையில் மாணவ, மாணவிகள் இலவச பயண அட்டைகள் பெற அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை கிளை அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து புகைப்படங்களை ஒட்டி தலைமையாசிரியர்களிடம் அளித்தும் வந்தனர். அதையடுத்து, நேரடியாக போக்குவரத்து அலுவலகத்தில் அளித்து இலவச பயண அட்டை பெறப்பட்டு வழங்கி வந்தனர்.

இதுபோன்ற காரணங்களால் மாணவ, மாணவிகள் பயண அட்டை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.இதைத் தடுக்க பள்ளி தொடங்கியவுடன் விரைவாக அளிக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் பெயர், முகவரி உள்ளிட்ட முழு விவரங்களுடன் இடைப்பட்ட தூரமும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட இருக்கிறது. மேலும், கணிப்பொறி ஆசிரியர் பதிவு செய்வதை உடனே தலைமை ஆசிரியர் சரிபார்த்து பள்ளி மேலாண்மை தகவல் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு அனைத்து விவரங்களையும் தொகுத்து அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனை அலுவலகங்களுக்கு அனுப்பி இலவச பயண அட்டைகள் பெற பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி