அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறோம்: அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2015

அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறோம்: அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு


அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது பணிக்கு வந்தவர்களை, அதிகாரிகள் புறக்கணிப்பதாக, தமிழ்நாடு அரசு, 2003ம் ஆண்டு இளநிலை உதவியாளர் மற்றும்உதவியாளர் முன்னேற்ற சங்கம், குற்றம் சாட்டி உள்ளது.இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த, 2003ல், அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது, 66 அரசு துறைகளில், 11 ஆயிரம் பேர் அமைச்சக பணியில் அமர்த்தப்பட்டோம். பின், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலம், நிரந்தரப்படுத்தப்பட்டோம். அ.தி.மு.க., அரசால் பணி அமர்த்தப்பட்டதற்காக, தி.மு.க., அரசும், அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது, பணிக்கு வந்ததால், ஒரு சில அரசு அதிகாரிகளாலும், எங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், எங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, குறிப்பிட்ட துறைக்கு பரிந்துரை செய்தும், நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.தற்கொலை:இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், பலர் இறந்துள்ளனர். மேல் அதிகாரி தவறான வழிகாட்டுதலை பின்பற்ற அச்சுறுத்தியதால், வேளாண் துறை உதவிப் பொறியாளர் முத்துக்குமாரசாமி, தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், எங்களை பழிவாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த, 2003ல் இருந்து, 2010 வரை, பணிபுரிந்த தொகுப்பூதிய பணிக் காலத்தை, தற்போது பணிபுரியும் நிரந்தர பணிக் காலத்தில், இணைக்க வேண்டும்.பதவி உயர்வு:வயது முதிர்வு காரணமாக, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி