பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2015

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...


அன்பான பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு...

தற்பொழுது இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கும் ரூ.10000 ஊதியம் மற்றும் 5 முழுவேலைநாட்கள் போன்ற செய்திகள் வெறும் வதந்திகளே !எந்த ஒரு நிச்சயத் தகவலானாலும் நமது "தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்செய்திகள்" -ல் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.
தமிழக அரசிடம் இதுகுறித்தும் மற்றும் சில கோரிக்கைகளையும் நமது சங்கத்தின்சார்பில் ஏற்கனவே முன்வைக்கப் பட்டுள்ளது. அரசு தரப்பில் பரிசீலித்து முடிவுஎடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.ஆனால், தற்சமயம் அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2. மற்றும் வழக்குகள் என்று பல்வேறு பணிகளில்மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஒரு சிலர் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை போன்றவற்றுடன் ஒப்பிட்டு அதைப் போன்றேஇதையும் எதிர்பார்க்கின்றனர்.

அது வேறு. இது வேறு. முன்னது நமக்கு என்றில்லை.எந்த ஒரு கடைநிலை ஊழியரானாலும் கொடுத்தே ஆகவேண்டியது. ஆனால் பின்னது முழுநேரஆசிரியர் நிரந்தரப்பணி. அதுபோன்று இதனையும் உடனடியாக எதிர்பார்க்க முடியாது.மேலும் இதில் நம்மை நிரந்தரப் படுத்த வேண்டுமெனில் பல சட்டச்சிக்கல்கள் உள்ளன.அவை அனைத்தும் சீர் செய்யப்பட வேண்டும்.இதுவரையிலும் நாம் சென்றுகொண்டிருக்கும் பாதை சரியானதே. எனவே நாம் இப்பொழுதுபொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கவேண்டியது அவசியம்.சங்கத்தின் சீரிய முயற்சியால் அரசின் நன்மதிப்பை நாம் பெற்றுள்ளோம். எனவே,நிச்சயமாக விரைவில் நல்ல செய்தியை தமிழக அரசிடமிருந்து எதிர்பார்ப்போம்.

மேலும், தகுதித்தேர்வு வைக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால்,தேர்வு குறித்தோ வழிமுறைகள் குறித்தோ எந்த முடிவும் மேற்கொள்ளவில்லை.வெயிட்டேஜ், மதிப்பெண் தளர்வு ஆகியவற்றால் பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளன.அதனால் டிஎன்பிஎஸ்ஸி மற்றும் டி இ டி போன்ற அரசுப்பணி நியமனங்களும்வழக்குகளின் பிடியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.சற்றுப் பொறுமையுடன் செயல்படுவோம்.

இணைந்திருங்கள்.

வெற்றி நமதே !

பொன். சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்

4 comments:

  1. பொறுமை கடலினும் பெரிது!
    பொன்.சங்கர் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஆதி திராவிடர்/கள்ளர் தடை விலகிய வழக்கு செய்தி தாளிள்(மிடியா) வரவில்லை ஏன்?

    கல்வி செய்தி விளக்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி