வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த முகாமில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.இரட்டை பதிவு, போலி வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஒழிக்க வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் ஆதார் எண் விவரங் களை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதற் கான பணிகள் நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் நடந்து வருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவுப்படி வாக்காளர்களின் விவரங்களைக் கொண்ட பிரத்தியேக படிவத்துடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து ஆதார்எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை பெற்றனர்.மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம், நீக்கம், சேர்த்தல், புகைப்பட மாற்றம் உள்ளிட்டவை இருப்பின் அதற்கான படிவத்தையும் பூர்த்தி செய்து பெற்று, அவற்றை கணினியில் பதிவு செய்தனர். குழப்பம் இருப்பின் அவை தீர்க்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்கப்பட்டது.இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர் வீட்டுக்கு வந்தபோது இல்லாத வாக்காளர்களின் வசதிக் காக ஏப்ரல், மே மாதங்களில் 2-வது மற்றும் 4-வதுஞாயிற்றுக்கிழமை களில் சிறப்பு முகாம்கள் நடத்தப் படும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்திருந்தார்.
அதன்படி இம்மாதத்துக்கான முதல் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.தமிழகம் முழுவதும்,64,099 வாக்குச்சாவடிகளில் நடந்த இம் முகாமில் சாவடிக்கு இரண்டு மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருந் தன. இணையதள இணைப்பு இருப்பின் உடனடியாகவும் இல்லாவிடில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்திலும் ஆதார் எண்கள் இணைக்கப்பட் டன. இந்த முகாமில் லட்சக்கணக் கானவர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து தேர்தல் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த முகாமில் பங்கேற்காதவர்கள் இம்மாதம் 26-ம் தேதி அல்லது மே 10 மற்றும் 24-ம் தேதிகளில் நடக்கும் முகாம்களில் பங்கேற்கலாம்’’ என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி