பொறியியல் படிப்பில் சேரஎன்னென்ன சான்றிதழ்கள் தேவை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2015

பொறியியல் படிப்பில் சேரஎன்னென்ன சான்றிதழ்கள் தேவை?


பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம், மே, 6ம் தேதி முதல், 29ம் தேதி வரை அண்ணா பல்கலைமையத்திலும், மே, 27ம் தேதி வரை, மற்ற, 59 மையங்களிலும் வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு முடிவுவரும் முன், தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டமாணவர்கள், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை, ஏதாவது ஒரு வகுப்பில் தமிழகத்தில் படிக்காமல் இருந்தால், அவர்கள் தமிழக வசிப்பிடச் சான்றிதழ் ஆன் - லைன் நகல் வைத்திருக்க வேண்டும்.இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரியாக இருந்தால், அதற்கான சான்றிதழும் தயாராக வைத்திருக்க வேண்டும்.முன்னாள் ராணுவத்தின ரின் வாரிசு, சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசு, உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், செவித்திறன் குறைவு போன்ற முன்னுரிமை கேட்கும் மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி