தேவகோட்டை பள்ளியில் திருமறை ஒப்புவித்தல் போட்டி - kalviseithi

Apr 20, 2015

தேவகோட்டை பள்ளியில் திருமறை ஒப்புவித்தல் போட்டி


தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருமுறை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
தேவகோட்டை சேக்கிழார் விழா குழுவின்சார்பில் நடைபெற்ற திருமுறை ஒப்புவித்தல் போட்டிக்கு வந்திருந்தோரை பள்ளிதலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.சேக்கிழார் விழா குழு செயலர்பேரா.சபா.அருணாசலம் தலைமை தாங்கி பேசுகையில்,நடுநிலைப் பள்ளி அளவில் உள்ளசிறுவயது குழந்தைகள் இது போன்று பாடல்களை படிப்பதன் மூலம் நல்ல எண்ணங்கள்சிறுவயது முதலே அதிகரிக்கும்.நமசிவாயம் என சொல்வதன் மூலமும்.கேட்பதன் மூலமும்மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகி அவை நல்ல செயல்களை செய்ய தூண்டும் .அதனால்தான்பல வருடங்களாக தொடக்க ,நடுநிலைப் பள்ளிகளில் இப்போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறோம் என பேசினார்.

நிகழ்ச்சியில் விழாக் குழு பொருளாளர்தட்சிணாமூர்த்தி,இணை செயலர் கவிஞர் பழனியப்பன்,செயற்குழு உறுப்பினர்ஐயப்பன்,பேரா.முத்தழகு கணேசன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவியரில் 27 பேரை பரிசுக்கு தேர்ந்தெடுத்தனர்.பரிசுகள் வருகின்ற மே மாதம்தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெற உள்ள சேக்கிழார் திருவிழாவில்வழங்கப்படும் என தெரிவித்தனர்.

நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி