சென்னை,மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2015

சென்னை,மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற வசதி


சென்னை, மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெறுவதற்கு 36 ரெயில் நிலையங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெற்குரெயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வேவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறப்பட்டு உள்ளதாவது:–

புகைப்படத்துடன் கூடிய அடையாளஅட்டை

மாற்றுத்திறனாளிகள் ஆன்–லைன் மற்றும் டிக்கெட் கவுண்ட்டர்களில்சலுகை பயண டிக்கெட் எடுத்துபயணிப்பதற்கு வசதியாக ரெயில்வேபுகைப்படத்துடன் கூடிய அடையாளஅட்டை வழங்க உள்ளது. இந்த அடையாளஅட்டையை சென்னை, திருச்சி, மதுரை,சேலம், பாலக்காடு மற்றும்திருவனந்தபுரம் ஆகிய கோட்டஅலுவலகங்களுக்கு தகுதியானஆவணங்களை சமர்ப்பித்துபெறலாம்.புகைப்பட அடையாள அட்டையைபெற விரும்புபவர்களுக்கு வசதியாகதெற்கு ரெயில்வே கூடுதலாக 36கூடுதல் இடங்களில் விண்ணப்பங்களைசமர்ப்பிக்கும் வசதியைஏற்படுத்தியுள்ளது.

36 ரெயில்நிலையங்களில்...

இதன்படி ஈரோடு,கரூர், திருப்பூர், கோவை,உதகமண்டலம், திண்டுக்கல், விருதுநகர்,மானாமதுரை, தென்காசி, நெல்லை,தூத்துக்குடி,விழுப்புரம்,கும்பகோணம், தஞ்சாவூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,நாகர்கோவில், அரக்கோணம், காட்பாடி,செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை,கும்மிடிப்பூண்டி, புதுச்சேரிஉள்பட 36 ரெயில் நிலையங்களில் மேமாதம் 1–ந் தேதி முதல் 2 மாதகாலத்துக்கு வார நாட்களில்செவ்வாய்க்கிழமை மற்றும்வியாழக்கிழமைதோறும் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரைசமர்ப்பிக்கலாம்.எஸ்.எம்.எஸ். தகவல்2மாத காலத்துக்கு பின்னர் கோட்டஅலுவலகங்களில் மட்டுமேபுகைப்படத்துடன் கூடிய அடையாளஅட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பதாரர்கள் அனுப்பும்விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு,விண்ணப்பம் சமர்ப்பித்த இடத்திலேயேபுகைப்படத்துடன் கூடிய அடையாளஅட்டை சம்பந்தப்பட்ட நபரிடம்வழங்கப்படும்.விண்ணப்பத்தில் செல்போன்எண் தெரிவித்தவர்கள் 3 வாரங்கள்ஆகியும் புகைப்பட அடையாள அட்டையைவாங்கவில்லையென்றால் அடையாளஅட்டையை பெற்றுக்கொள்ளுமாறுகுறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.)அனுப்பப்படும்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி