மாணவர்களுக்கு இலவச மரக்கன்று: பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2015

மாணவர்களுக்கு இலவச மரக்கன்று: பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல்


'சுற்றுச்சூழல் பாடத்தை, பாடத்திட்டதில் சேர்ப்பதுடன், மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்று அளித்து, அவற்றை கல்வி நிறுவன வளாகத்தில் நட்டு வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும்' என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கல்விநிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாடத்தை, பாடத்திட்டத்தில் இணைத்துள்ளனவா என்பதை கண்காணிக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம், யு.ஜி.சி.,யை கேட்டுக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு ஆகி விடும் என்பதால், விரைவில் பாடத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவர்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, 'ஒரு மாணவன் ஒரு மரம்' என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பல்கலைகளின், நாட்டு நலப்பணித் திட்டம் - என்.எஸ்.எஸ்., மற்றும் தொடர்பானதுறைகள் இணைந்து, ஒரு மாணவன், ஒரு மரக்கன்றையாவது, பல்கலை அல்லது கல்வி நிறுவன வளாகத்தில், நடுவதை உறுதிப்படுத்த வேண்டும். பல்கலைகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு, இத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். பல்கலைகள், மாணவர்களுக்கு, 'சிறப்பு மரம் நடும் திட்டம்' அடிப்படையில், இலவசமாக மரக்கன்றுகள் அளித்து, பல்கலை, கல்வி நிறுவன வளாகத்தை, இயற்கை சூழ்ந்த பசுமை வளாகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி