புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மாநிலத்திலேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. 9001:2008 தரச்சான்று பெற்றுள்ளதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் ஆகியோர் கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:அரசு நலத் திட்டங்களை கொண்டு சேர்ப்பது, கண்காணிப்பது ஆகியவற்றில் இணையதள வசதியை அறிமுகப்படுத்தி அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும்,"புதுகை சிலெட்' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் உடனுக்குடன் பெறும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நிகழாண்டில், பள்ளிகளில் பயின்று மாற்றுச்சான்றிதழ் கோரும் மாணவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளில் புகைப்படத்துடன் கூடிய மாற்றுச்சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, அரசு நலத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தலில் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையை முதன்மையான இடத்துக்கு கொண்டு செல்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி ஐ.எஸ்.ஓ 9001:2008 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே முதலாவதாக புதுக்கோட்டை மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலகம் இந்தத் தரச்சான்றை பெற்ற அலுவலகம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.இதுகுறித்து தகவலறிந்த தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி