பெண்கள் பாதுகாப்புக்கென செல்லிடப்பேசியில் தனி வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2015

பெண்கள் பாதுகாப்புக்கென செல்லிடப்பேசியில் தனி வசதி


தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கென செல்லிடப்பேசியில் தனி பயனுறு (மொபைல் அப்ளிகேஷன்) காவல் துறை சார்பில் கோவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .முதல்கட்டமாக கோவையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம், அவசர காலத்தில் உதவி தேவைப்படும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி பி.கந்தசாமி தலைமையில் கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காவல் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கோவை மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. கே.சங்கர்உள்பட மாநகர், புறநகர் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதில், பெண்கள் பாதுகாப்புக்கென பிரத்யேக மொபைல் அப்ளிகேசன் நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து கோவை மாநகர காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியது:இன்றைய சூழலில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த தமிழக காவல் துறை ஆலோசித்து வருகிறது.

அவசர தருணங்களில் பெண்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க வேண்டும் என திட்டமிட்டு, "கார்டியன் அப்ளிகேசன்' என்ற பெயரில் அவசரக் கால மொபைல் அப்ளிகேசன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், காவல் துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், இணையதளம் வாயிலாக மொபைல் அப்ளிகேசனை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். அதில் கேட்கப்படும் தகவல்களை அளித்து, இதன் மூலமாக பயன்பெறலாம்.அவசர, ஆபத்துக் காலங்களில் உதவி தேவைப்படும் பெண்கள், பதிவிறக்கம் செய்த மொபைல் அப்ளிகேசனில் குறிப்பிட்ட பொத்தானை அழுத்தும் போது, சம்பந்தப்பட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறை, ஆபத்தில் இருப்பவரின் நண்பர்கள், குடும்பத்தினரின் செல்லிடப் பேசிகளுக்கு தானாகவே தகவல் செல்லும் வகையில் இதுவடிவமைக்கப்பட்டுள்ளது. "மைக்ரோசாப்ட்' நிறுவன உதவியுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது."ஆண்ட்ராய்டு', "விண்டோஸ்' செல்லிடப் பேசிகளில் இது வேலை செய்யும். சாதாரண செல்லிடப் பேசிகளிலும் வேலை செய்யும் வகையில் விரைவில் வடிவமைக்கப்படவுள்ளது. இணையதள வசதி உடைய செல்லிடப் பேசிகளில் உதவி கோருவோர் எங்கே உள்ளார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கென தனி தகவல் பரிமாற்றக் கட்டமைப்பு காவல் துறை கட்டுப்பாட்டு அறைகளில்உருவாக்கப்பட்டு முழுநேர பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்படுவார்கள். பெண்கள் மட்டும் அல்லாமல், அவசர உதவி தேவைப்படுவோரும் இதைப் பயன்படுத்தலாம்.தில்லியில் இது போன்ற ஒரு திட்டம் ஏற்கெனவே உள்ளது. தமிழகத்தில், முதல் கட்டமாக கோவையில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. எஸ்.ஐ., உயர் அதிகாரிகள் சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டு, தற்போது சோதனை அடிப்படையில் இந்த மொபைல் அப்ளிகேசன் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி