நடப்பு கல்வியாண்டுக்கான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கின. 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 26ம் தேதியும், பிளஸ் 2 தேர்வுகள், ஏப்., 20லும் முடிந்தன.
நாடு முழுவதும், 10ம் வகுப்பில், 13.73 லட்சம் பேர்; பிளஸ் 2வில், 10.40 லட்சம் பேர் என, மொத்தம், 9,450 பள்ளிகளைச் சேர்ந்த, 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சென்னை மண்டல தேர்வு முடிவுகளை, 10ம் வகுப்புக்கு, மே19ம் தேதியும், பிளஸ் 2வுக்கு, மே 29ம் தேதியும் வெளியிட, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதன்படி, மே 19ம் தேதி (நாளை) 10ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தவறினால், வரும் 21ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முடிவுகளை,http://cbseresults.nic.in/என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி