பள்ளி வாகன ஆய்வு 11ம் தேதி துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2015

பள்ளி வாகன ஆய்வு 11ம் தேதி துவக்கம்



பள்ளி வாகன ஆய்வை முன்கூட்டியே துவக்குமாறு, அனைத்து ஆர்.டி.ஓ.,க்களுக்கும், போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது; வரும் 11ம் தேதி, ஆய்வு பணி துவங்குகிறது.

தமிழகத்தில், 22 ஆயிரம் பள்ளி வாகனங்கள் உள்ளன. பள்ளி வாகன விபத்தை தவிர்க்க, அவற்றின் படிக்கட்டு, அவசரகால கதவு, டயர்கள், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், வேகக் கட்டுபாட்டு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஓட்டுனர் உடல் தகுதி, உதவியாளர் நிலை ஆகியவை குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.


ஆண்டுதோறும், கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறப்பதற்கு முன், பள்ளி வாகன ஆய்வு நடந்து, தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு, வரும் 21ம் தேதி ஆய்வை துவக்க இருந்தனர். கடந்த ஆண்டில், கடைசி நேரத்தில், 2,000 வாகனங்களை ஆய்வு செய்வதற்கு முன், பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. எனவே, தற்போது பள்ளி வாகன ஆய்வை முன்கூட்டியே முடிக்க, உயரதிகாரிகள் முடிவு செய்தனர். தமிழகம் முழுவதும் உள்ள, 79 ஆர்.டி.ஓ.,க்களுக்கும் இதற்கான உத்தரவு அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரும் 11ம் தேதி முதல், 31ம் தேதி வரை ஆய்வு நடத்தப்படும்; அதற்குள் பள்ளி வாகன ஆய்வு முடிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு அம்ச குறைபாடு உள்ள வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் குறைகள் சரி செய்து, தகுதி சான்றிதழ் வழங்கும் பணியும், இந்த நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இதுகுறித்து, ஆர்.டி.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். பள்ளி நிர்வாகமும், இந்த ஆய்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி