கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வு முடிவுகள் மே 11-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகவியல் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அரசுத்துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர வேண்டுமானால் தொழில்நுட்பக் கல்வித்துறை நடத்தும் மேல்நிலை, கீழ்நிலை தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தொழில்நுட்பத் தகுதி பெற்றால்தான் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வுகளை ஏறத்தாழ 81 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த முறை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் சற்று தாமதம் ஆகிவிட்டது. தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 11) வெளியிடப்படும்” என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி