பொறியியல் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 13-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் நடத்தப்பட உள்ளது.
மூன்றாண்டு பாலிடெக்னிக் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 13-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
சென்னையில் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம், புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் என மொத்தம் 34 மையங்களில் விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்பட உள்ளன.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 300. "கட்டணத்தை -செயலர், பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி, காரைக்குடி - 630 004' என்ற பெயரில் காரைக்குடியில் செலுத்தத்தக்க வரைவோலையாக எடுத்து சமர்ப்பித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 9-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு தேதி உள்ளிட்ட விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ஹஸ்ரீஸ்ரீங்ற்.ங்க்ன்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி