இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் சேர டெட் (Teacher Eligibility Test-TET) என்று சொல்லப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு ‘ஸ்லெட்’ (State Level Eligibility Test) அல்லது ‘நெட்’ (National Eligibility Test) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஸ்லெட் தேர்வில் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் மட்டுமே பணிபுரிய முடியும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதியைப் பெறுவார்கள்.தற்போது இந்த நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு பொதுவாக முறையே மார்ச், செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும். நாடு முழுவதும் 89 பெரிய நகரங்களில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் ஜூன் மாதம் 28ம் தேதி இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 100 பாடங்களின்கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
கல்வித்தகுதி:தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் நெட் தேர்வெழுதலாம். (அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கான நெட் தகுதித்தேர்வு சிஎஸ்ஐஆர் மூலம் தனியே நடத்தப்படுகிறது).முதுகலைப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), மாற்றுத்திறனாளிகள் எனில் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. முதுகலை இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்போரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:நெட் தேர்வில் உதவிப் பேராசிரியர் தகுதிக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பும் கிடையாது. ஆனால், ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப் தகுதிக்கு வயது வரம்பு 28. இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை அளிக்கப்படுகிறது.
தேர்வுக் கட்டணம்:ரூ.600. பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் தேர்வுக் கட்டணமாக ரூ.300 செலுத்தினால் போதும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150.
கடைசி நாள்:ஏப்ரல் 16ம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். மே 15 கடைசி தேதியாகும். கட்டணத்தைச் செலுத்துவதற்கான வங்கி செலுத்துச் சீட்டை (செலான்) பதிவிறக்கம் செய்யவும், வங்கிகளில் கட்டணத்தைச் செலுத்தவும்மே 15 கடைசித் தேதி.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி