பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் 18-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2015

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் 18-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது


2015-2016-ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்நடைபெறும் முதலாமாண்டு பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெறும் பகுதிநேர பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவங்கள் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18-ந்தேதி முதல் ஜூன் 5-ந்தேதி வரை வழங்கப்படும்.
மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.150. நேரில் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ.150-ஐ ரொக்கமாகச் செலுத்தியும், தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.150-க்கான வங்கி கேட்பு வரைவோலையினை சம்பந்தப்பட்ட ‘‘முதல்வர்’’ பெயரில் எடுத்து, சுயவிலாசமிட்ட உறையில் ரூ.15-க்கான அஞ்சல் தபால் ஒட்டி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்: ஜூன் 6-ந் தேதி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி