196 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 3 மாணவியர் 1,172 மதிப்பெண் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2015

196 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 3 மாணவியர் 1,172 மதிப்பெண்


பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில், 196 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மூன்று மாணவியர், 1,172 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகள் பிரிவில், மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வில் தமிழகம் முழுவதும், 90.6 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில், அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளை விட, 6 சதவீதம் குறைவாக, 84.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பள்ளிக் கல்வித்துறை நேரடி கட்டுப்பாட்டில், 2,700 பள்ளிகள் உள்ளன. 3 லட்சத்து,44 ஆயிரத்து, 189 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 79.11 சதவீத மாணவர்; 88.30 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சென்னை, செங்குன்றம் பெண்கள் பள்ளி மாணவி ராதா, சென்னை, அசோக் நகர் மகளிர் பள்ளி மாணவி ஏஞ்சல் மற்றும் கோவை அனையூர் அரசுப் பள்ளி மாணவி மல்லிகா அர்ஜுனன் ஆகியோர், 1,172 மதிப்பெண் பெற்று, அரசுப் பள்ளிகள் பிரிவில், மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளனர். கடந்த, 2012ல், 41 பள்ளிகள்; 2013ல் 100 பள்ளிகள்; 2014ல், 113 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இந்த ஆண்டு, 196 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி