104 சேவை மையத்தில் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உளவியல் ஆலோசனைகளை பெறலாம்.தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் 104 மருத்துவ உதவி சேவை மையம் 2013-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தொடங்கப்பட்டது.
மருத்துவ உதவிகள், முதல் கட்ட மருத்துவ சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. 104 சேவை மையத்தில் பணியாற்றும் மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், தேவை யான உதவிகளையும் வழங்கு கின்றனர்.இவை தவிர அரசு மருத்துவ மனைகளில் டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை, நோயாளிகள் அவதி, மாத்திரை, மருந்துகள் தட்டுப்பாடு போன்ற புகார்களையும் பொதுமக்கள் 104-ஐ தொடர்பு கொண்டு பதிவு செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கும் சேவை செய்ய இம்மையம் முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு நாளை (மே 7) வெளியாக உள்ளது. தேர்வில் தோல்வியடையும், குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகள் தற்கொலை போன்ற தவறான முடிவு களை எடுக்கின்றனர். இதனை தடுப் பதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் உளவியல் ஆலோசனைகளை வழங்கவும் 104 சேவை மையம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து 104 சேவை மையத்தின் மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
குழு அமைப்பு
பிளஸ் 2 மாணவ, மாணவி களுக்கு உளவியல் ஆலோசனை கள் வழங்குவதற்காக 104 சேவை மையத்தில் அரசு மனநல மருத்துவர் தலைமையில் உளவியல் நிபுணர்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் அமைக் கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு ஆலோச னைகளை வழங்கி வருகின்றனர். மனக்குழப்பத்தில் இருக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவ உதவி சேவை மையத்தை 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி