திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 கணிதப் பாட புத்தகம் பகுதி 1-க்கு பதில் பகுதி 2 வழங்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பிளஸ் 2 மாணவர்களுககு தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருவள்ளூரில் தனியார் நிதி உதவிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கணித பாடப் புத்தகத்தில் பகுதி 1-க்கு பதில் பகுதி 2 வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.இதுகுறித்து அந்தப் பள்ளியில் கேட்டதற்கு கல்வித் துறையில் இருந்து கணித பாடபுத்தகத்தின் பகுதி 2 மட்டுமே வந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டபோது: தமிழக அரசு சார்பில் அனைத்துப் பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. மேலும்பல பள்ளிகளில் வழங்கப்பட்ட புத்தகத்தை ஆய்வு செய்ததில் பகுதி-1 வழங்கப்பட்டுள்ளது.அந்த குறிப்பிட்ட பள்ளியில் அவர்கள் வாங்கி வந்த புத்தகங்கள் மட்டும் மாறியிருக்கலாம். அவர்கள் முறையாக கேட்டால் அந்த புத்தகங்கள் மாற்றி வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி