பிளஸ் 2 தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது, மதிப்பெண் குறைந்தது போன்ற காரணங்களால் சங்கடமாக உணர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர் என 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நேற்று ‘104’ சேவை மையத்துக்கு தொடர்புகொண்டு ஆலோசனை பெற்றனர்.
பிளஸ் 2 தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தது மற்றும் மதிப்பெண் குறைந்தது போன்ற காரணங்களால் சில மாணவ, மாணவிகள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இதை தடுக்க மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3 நாட்களாக ‘104’ மருத்துவ உதவிசேவை மையம் மூலம் உளவியல் ஆலோசனை வழங்கப் பட்டு வருகிறது. ‘104’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் மாணவ, மாணவி களுக்கு அரசு மனநல டாக்டர்கள், உளவியல் நிபுணர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனைகளை வழங்கு கின்றனர்.‘தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிடுவதும், மதிப்பெண் குறைவதும் மிகவும் சாதாரண விஷயங்கள். இதற்காக தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது. இதோடு வாழ்க்கை முடிந்து விடவில்லை. தேர்வு முடிவு என்பதுவாழ்க்கையின் ஒரு சிறிய கட்டம். இன்னும் சாதனை படைக்க வேண்டியது நிறைய உள்ளது’ என்பதுபோல தன்னம்பிக்கை கொடுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
இதை யடுத்து தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மற்றும் குறைவாக மதிப்பெண் எடுத்த தால் மிகவும் சங்கடமாக உணர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆயிரக் கணக்கானோர் 104-ஐ தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுள்ளனர். நேற்று ஒரேநாளில் மட்டும் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் 104-ஐ தொடர்பு கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நாளில் 2,300 பேர் தொடர்பு கொண்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி