பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி: இதுவரை 80 ஆயிரம் பேர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2015

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி: இதுவரை 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்


பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், 80 ஆயிரத்துக்கு அதிகமானோர் விண்ணப்பத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் சற்றேகடினமாக இருந்ததால், அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்தது.

மேலும், எம்.பி.பி.எஸ்.- பி.இ. படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டைப் போன்றே ஏராளமானோர் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.புதன்கிழமை மாலை வரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புகைச் சீட்டில் உள்ள எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ முடியும்.விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (மே 14) முடிவடைகிறது. கடந்த ஆண்டில் 87 ஆயிரம் பேர்மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதே அளவை எட்ட வாய்ப்பு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி