அண்ணா பல்கலை. முகாமில் 2,276 பேருக்கு பணி நியமன ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2015

அண்ணா பல்கலை. முகாமில் 2,276 பேருக்கு பணி நியமன ஆணை

அண்ணா பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதும் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்களில் தேர்வு செய்யப்பட்ட 2,276 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் மட்டுமின்றி, இணைப்புக் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு கட்டங்களாக வேலைவாய்ப்பு முகாம்களை பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதுபோல் 2014-15-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 2,276 மாணவர்களை பல்வேறு நிறுவனங்கள் தேர்வு செய்துள்ளன.

இவர்களுக்கு நாமக்கல்லில் வருகிற 7-ஆம் தேதியும், சென்னையில் 14-ஆம் தேதியும், கோவையில் 21-ஆம் தேதியும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

பணி நியமன ஆணைகள் பெற உள்ள மாணவர்களின் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி