ஜெயலலிதா மே 24-க்குள் முதல்வராக பதவியேற்க வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2015

ஜெயலலிதா மே 24-க்குள் முதல்வராக பதவியேற்க வாய்ப்பு.


மே 22-ம் தேதியில் இருந்து 24-ம் தேதிக்குள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.மே 11-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அதற்குப் பின்னர் அவர் இதுவரை பொதுமக்களையோ, பத்திரிகையாளர்களையோ சந்திக்கவில்லை.

இதனால், தமிழக அரசியல்வட்டாரத்தில் பல்வேறு ஊகங்கள் நிலவி வந்தன.ஜெயலலிதா நல்ல நாளுக்காக காத்திருக்கிறார் என்றும், தீர்ப்பில் குழப்பம் இருப்பதால் கர்நாடக அரசின் முடிவை எதிர்நோக்கியிருக்கிறார் என்றும் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் இன்று காலை, "வரும் 22-ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காலை 7 மணியளவில் நடைபெறும் அதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்" என அறிவித்திருந்தார்.இதன் காரணமாக, ஜெயலலிதா ஏன் மவுனம் காக்கிறார், ஏன் தயங்குகிறார் போன்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வந்தது.இருப்பினும் அன்றைய தினம் (மே 22) ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சியை கலைக்க உத்தரவிடுவாரா? ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவாரா? என்ற கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன.இந்நிலையில், மே 22-ம் தேதியில் இருந்து 24-ம் தேதிக்குள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது

.இது தொடர்பாக பிடிசி செய்தி நிறுவனத்துக்கு அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "வரும் 22-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்" என்றார்.

4 comments:

  1. ennatha solla sekkiram nadakkatum adw list vidattum

    ReplyDelete
    Replies
    1. makkal valaiya konjam parunga ennum adw list vidala .case mudinju one month aachi.

      Delete
  2. ஆமாம் இது ரொம்ப முக்கியம்? பதவி ஏற்ற உடனே பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விடும்? விண்ணை முட்டும் காய்கறி விலை குறைந்து விடும்? லஞ்சம் ஒழிந்து விடும்? Modi wave becomes wane. Old Teacher (Manmohan)4 + 4 =8. New Teacher 5 + 3 = 8.ஆக பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ராஜ்ய சபாவில் பெரும்பான்மை இல்லாத மோடி அரசு சரிவை நோக்கி....தலைநகர் டில்லியில் BJPசாசாதிக்கமுடியல.

    ReplyDelete
  3. TET தேர்வை ஒழுங்காக நடத்த முடியல பிரச்சனைக்கு தீர்வு காண முடியல.இதுல பதவி ஏற்ற உடனே எல்லாம் முடிந்து Solve ஆகிவிடும்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி