இலவச கட்டாயக் கல்வி: 25 சதவீத இடங்களை முழுமையாக நிரப்பக்கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2015

இலவச கட்டாயக் கல்வி: 25 சதவீத இடங்களை முழுமையாக நிரப்பக்கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்


இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக அரசுக்குஉத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுஇது தொடர்பாக "மாற்றம் இந்தியா' நிறுவனத்தின் இயக்குநர் ஏ.நாராயணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:-

தமிழ்நாடு மழலையர், தொடக்கப்பள்ளி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான சங்கத்தின் மாநாடு கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது.ரூ.150 கோடி நிலுவை காரணமாக...அந்தக் கூட்டத்தில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் கடந்த சில ஆண்டுகளுக்கான கட்டணத் தொகையாக ரூ. 150 கோடியை அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. அதனால், நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்கவில்லையெனில் நிகழ் கல்வியாண்டில் (2015-16)இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்ட விதிமீறல்:

இது பல்வேறு செய்தித்தாள்கள், ஊடகங்களிலும் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியானது. இதனால், ஏழை குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். மேலும், குழந்தைகளை இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்க மாட்டோம் எனக் கூறுவது சட்ட விதிமீறல் ஆகும்.இதனால் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நிகழ் கல்வியாண்டுக்கு (2015-16) அவர்கள் விண்ணப்பங்கள் வழங்கவில்லை. இந்த விண்ணப்பங்கள் மே மாதம் 3-ஆம் தேதி முதல்18-ஆம் தேதி வரை வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவையும் சங்க உறுப்பினர்களான பள்ளிகள் பின்பற்றவில்லை. எனவே, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்ற தீர்மானத்துக்கு தடை விதிக்க வேண்டும்.கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை பள்ளிகள் நிரப்புகின்றனவாஎன்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி, ஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகம், சீருடை உள்பட அனைத்து உதவிகளையும் செய்து தர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்.இரண்டு வாரங்களுக்குள்...இந்த மனு விடுமுறைக்கால நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசு, பள்ளிகள் சங்கம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி