பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மாணவர்கள் உயர் கல்விக்குவிண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியானது.
இந்த தேர்வில் 8 லட்சத்து 39 ஆயிரம் பேர் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும்.அவை 14ம் தேதி முதல் பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வு துறை அறிவித்திருந்தது. தற்போது தற்காலிக மதிப்பெண் சான்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை அந்தந்த பள்ளிகளி்ன் இணையத்தில் இருந்து பதவிறக்கம் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல் பள்ளிக் கணினிகளில் இருந்து தற்காலிக சான்றுகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. அவை நாளை மாணவ மாணவியருக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து வருகின்றனர். தற்காலிகசான்றிதழின் மதிப்பு 6 மாத காலம் என்பதால் அதற்குள் நிரந்தர பட்டியல் வழங்கதேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி