அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, சிறப்பு, 'டியூஷன்'நடத்த, ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 22ம் தேதி துவங்குகிறது.
இந்த தேர்வில் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் அதிக அளவில் பங்கேற்பர். அரசு, ஆதி திராவிட மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் பலர்தேர்வுக்கு வருவதில்லை. அப்படியே பள்ளிப் படிப்பை முடிக்காமல், பணிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அரசு, ஆதி திராவிட மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில், நலிந்த பிரிவு மாணவர்களே படிக்கின்றனர். இவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், பின், மீண்டும் தேர்வு எழுத முயற்சிப்பதில்லை. அதனால், அவர்கள் பள்ளிப் படிப்பை, முழுமையாக முடிக்காத நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்க, சிறப்புத் துணைத் தேர்வுக்கு மாணவர்களை தவறாமல் பங்கேற்க வைக்குமாறு, பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். விடுப்பு முடிந்து உள்ளூர்களில் இருக்கும் ஆசிரியர்கள், மாணவர் நலன் கருதி அவர்களை பள்ளிக்கு வரவழைத்து, துணைத் தேர்வு வரை சிறப்புப் பயிற்சி தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி