பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியீடு: கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2015

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியீடு: கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் விநியோகம்


அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பபடிவங்கள் விநியோகம் தொடங்கி உள்ளது.மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை வாங்கி செல்கின்றனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவு

தமிழகம் முழுவதும் 8¾ லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ள பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை மறுதினம்(7-ந்தேதி) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுக்கு பின்னர் மாணவ-மாணவிகள் தங்கள் கல்வி வாழ்க்கையின் அடுத்தக்கட்டபயணத்தில் அடி எடுத்து வைக்க உள்ளனர்.

இந்தநிலையில் பிளஸ்-2 வகுப்பில் 3-வது குரூப் படித்த மாணவ-மாணவிகள் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் அரசுமற்றும் தனியார் கல்லூரிகளில் தொடங்கி உள்ளது.மாணவ-மாணவிகள் ஆர்வம்சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று விண்ணப்ப படிவத்தை வாங்கு வதற்காக காலை முதலே மாணவிகள் குவிந்தனர். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் விண்ணப்ப படிவங்கள் விநியோகம் நேற்று தொடங்கியது. விண்ணப்ப படிவத்தை வாங்குவதற்காக அதிகாலையிலேயே மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கல்லூரியில் குவிய தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல மாணவிகள் கூட்டம் அதிகமானதால் சிறப்பு கவுண்ட்டர்கள் மூலம் அங்கு விண்ணப்பபடிவம் விநியோகம் செய்யப்பட்டது.ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரி, மாநில கல்லூரி ஆகியவற்றிலும் விண்ணப்ப படிவங்களை வாங்குவதற்கான மாணவர்கள் கூட்டம் அலைமோதியது.

விண்ணப்பம் வாங்கிய குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால் என்னசெய்வது? என்ற அச்சத்தில் ஒரு சில மாணவ-மாணவிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் விண்ணப்ப படிவத்தை வாங்கி சென்றனர்.விண்ணப்ப படிவம் வாங்க வர முடியாத மாணவர்களுக்கு பதிலாக அவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள் வாங்கி சென்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் 7-ந்தேதி நடைபெறும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.ஸ்டெல்லா மாரிஸ் மகளிர் கல்லூரியில் ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்ப படிவங்கள் விற்பனை நடக்கிறது.பி.காம். படிப்பு முக்கியத்துவம்கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் பி.காம், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களே அதிகளவில் விற்பனையாகி வருவதாக கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்ப படிவங்கள் விநியோகமும் நேற்று தொடங்கியது.அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 2 ரூபாய் பதிவு கட்டணத்துடன் சேர்த்து ஒரு விண்ணப்ப படிவம் 27 ரூபாய்க்கும், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு 2 ரூபாய்க்கும் (பதிவு கட்டணம் மட்டும்) விற்பனை செய்யப்படுகின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் விண்ணப்ப படிவங்கள் அந்தந்த கல்லூரி நிர்வாகம் நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

தொடர்ந்து ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை விண்ணப்ப படிவங்கள் விநியோகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையையொட்டி வெளியூர் சென்றுள்ள மாணவ-மாணவிகள் விண்ணப்ப படிவங்கள் வாங்கும் ஆர்வத்தில் சென்னை திரும்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி