நாளை பிளஸ்–2 தேர்வு முடிவு: எந்த பாடத்திற்கும் கருணை மதிப்பெண் இந்த வருடம் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2015

நாளை பிளஸ்–2 தேர்வு முடிவு: எந்த பாடத்திற்கும் கருணை மதிப்பெண் இந்த வருடம் இல்லை


பிளஸ்–2 தேர்வு இந்த ஆண்டு எழுதிய மாணவர்களுக்கு அதிஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த வருடம் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் மிக கடினமாக இருந்தன.வகுப்பில் மிக நன்றாக படிக்க கூடிய மாணவ– மாணவிகளே என்ஜினீயரிங், மருத்துவ கட் ஆப் மதிப்பெண் பெறுவது கடினம்.
மொத்த மதிப்பெண்ணும் எதிர்பார்த்த அளவு கிடைக்காது என்ற கவலையில் உள்ளனர்.மறைமுகமாகவும் இதுவரை கேட்காத கேள்விகளும் இந்த ஆண்டு கேட்டதால் மாணவர்கள் சரியாக பதில் அளிக்க முடியாமல் திணறினார்கள்.வினாக்கள் கடினமாக கேட்கபட்டதால் கருணை மதிப்பெண் வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.கணித தேர்வில் 10 மதிப்பெண் வினா ஒன்றில் பிளஸ்–க்கு பதிலாக ‘மைனஸ்’ முறையில் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அந்த வினா தவறாக கேட்கப்பட்டு இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அந்த கேள்வியில் தவறு இல்லை என்று தேர்வுத்துறை விளக்கம் அளித்தது.அந்த வினாவிற்கு விடை எழுத முடியாமல் போனதால் 200–க்கு 200 மதிப்பெண் கிடைக்கும் என்று நினைத்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.மேலும் கணித பாடம் மட்டுமின்றி எந்த பாடத்திற்கும் கருணை மதிப்பெண் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது:–பிளஸ்–2 தேர்வை பொறுத்தவரையில் மொழிப்பாடங்கள் தவிர மற்ற பாடங்கள் முக்கியமானதாகும். அதனால் வினாக்கள் தேர்வு, அச்சு பிழை போன்றவை ஏற்படாமல் கவனமாக இருந்தாலும் வேதியியல் பாடத்தில் ஒரு வினா மதிப்பெண்ணில் இரண்டு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதற்கும், வேளாண்மை பயிற்சி பாடத்தில் ஒரு வினாவிற்கும் முழு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் மற்ற வினாக்களில் எவ்வித தவறோ, வெளியில் இருந்தோ கேட்கப்படவில்லை. அதனால் கணிதம் உள்ளிட்ட எந்த பாடத்திற்கும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டிய அவசியம் எழவில்லை.பாடத்திற்கு சம்பந்தப்படாமல் கேட்கப்பட்ட கேள்வியாக இருந்தால் அதற்கு விடை எழுத முயற்சி செய்தாலே (விடை எண் குறிப்பிட்டு இருத்தல்) அதற்கு கருணை மதிப்பெண் பொதுவாக வழங்கப்படும்.

அது போன்று எந்த வினாக்களும் இந்த ஆண்டு கேட்கப்படவில்லை.அதனால் கீ–ஆன்சர் படிவத்தில் உள்ளது போல விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வினாவும் அதற்கான விடைகளும் மிககவனமாக ஆராய்ந்து எடுக்கப்பட்டவையாகும். அதனால் ஒரு வினாவிற்கு கூட கருணை மதிப்பெண் வழங்க வாய்ப்பு ஏற்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதனால் கருணை மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நாளை தேர்வு முடிவு வெளியாக உள்ளது.ஆனாலும் கடந்த ஆண்டை காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி