திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, இறுதி அனுமதி கிடைத்துள்ளது. கூடுதல் இடங்கள் கிடைத்த நான்கு கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்.,இடங்கள் உள்ளன.
விழுப்புரம், திருவாரூர் மருத்துவ கல்லூரிகள் துவக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யின் இறுதி அனுமதி சமீபத்தில் கிடைத்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகள் உட்பட, ஒன்பது கல்லூரிகளில், அவ்வப்போது, கூடுதல் எம்.பி.பி.எஸ்.,இடங்கள் பெறப்பட்டன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, ஆண்டுதோறும்அனுமதி பெற வேண்டும். இதில், சேலம், தூத்துக்குடி, திருச்சி, செங்கல்பட்டு மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில், இந்த ஆண்டு கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, எம்.சி.ஐ., அனுமதி கிடைத்து விட்டது. சென்னை, திருவண்ணாமலை, சிவகங்கை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளில், ஏற்கனவே பெறப்பட்ட கூடுதல் இடங்களில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதிஅளிக்க, எம்.சி.ஐ., குழு ஆய்வு நடத்தி, அறிக்கையை சமர்ப்பித்தாலும், இன்னும் முறையான அனுமதி கிடைக்கவில்லை.
எம்.பி.பி.எஸ்., 'கவுன்சிலிங்' அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்குள் அனுமதி கிடைக்குமா என்ற, கேள்வி எழுகிறது. இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எந்த சிக்கலும் இன்றி, ஏற்கனவே அனுமதித்த கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கை நடக்கும். சில நாட்களில், இதற்கான அனுமதி கிடைத்து விடும்' என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி