விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2015

விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள்


'தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்காக ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன,'' என மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய (எஸ்.சி.இ.ஆர்.டி.,) இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் பணிகளுக்காக (ஜெராக்ஸ்)இவரை சிறப்பு அதிகாரியாக தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் நேற்றுமுன்தினம் நியமித்தார். மதுரை வந்த அமுதவல்லி கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படுகின்றன. மே 8 முதல்மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் விண்ணப்பங்கள் அளித்தனர்.அனைத்து மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்று முதல் (மே 16) விடைத்தாள் நகல்களை 'ஸ்கேன்' செய்யும் பணிகள் துவங்குகின்றன. இதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் 50 கல்வி அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.

10 நாட்களில் விடைத்தாள் நகல்கள் அனைத்தும் 'ஸ்கேன்' செய்யப்பட்டு தேர்வுத் துறை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்படும். சம்மந்தப்பட்ட மாணவர்கள் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்யலாம். வித்தியாசம் இருந்தால் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி