இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2015

இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்


பிளஸ் 2 மாணவர்கள் திங்கள்கிழமை (மே18) முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனஅரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடித்த மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி முதல்பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு, தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.இது தவிர தனித் தேர்வர்களும் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், தேவைப்படும்போது மாணவர்களே தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்படி பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் வரும் மே 18-ஆம் தேதி முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.

18 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. this is too much, institutions can accept direct mark statement from website itself, officals dont know to simplify the system, poor govt and officers

    ReplyDelete
  3. Trb kku call panna "theriyaathu" nu solraanga..case mudunchaathan nu solraangaa..

    ReplyDelete
  4. 15kkul varum nanga..18 vanthu paarunga nu sonnanga...enna pandranga ne theriyalaye

    ReplyDelete
  5. Trb vendumenre sathi seigirathu..

    ReplyDelete
  6. Ada kadavule!!!! En intha kodumai....trb kku nalla putthi koduppa!...

    ReplyDelete
  7. Pg next exam announceme on aug'15. Welfare list will come shortly.

    ReplyDelete
  8. Sir 1 mark LA chance misspanuna persons Ku welfare list LA chance iruka.

    ReplyDelete
  9. Sir 1 mark LA chance misspanuna persons Ku welfare list LA chance iruka.

    ReplyDelete
  10. Sure. Dont worry.you have a chance.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி