பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 400 மேலாண்மை டிரெய்னி பணிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2015

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 400 மேலாண்மை டிரெய்னி பணிகள்.


பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Bharat Sanchar Nigam Ltd (BSNL)

காலியிடங்கள்: 400

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

வெளிப்பிரிவு:
1. Telecom Operations - 150
2. Telecom Finance - 50

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

உள் பிரிவு:
3. Telecom Operations - 150
4. Telecom Finance - 50

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்:ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், கணினியில், ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.நிதியியல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ, ஐசிடபுள்ஏ, சிஎஸ் போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.750.

விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bsnl.in/opencms/export/sites/default/BSNL/about_us/hrd/pdf/MTExternal.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி