ஊதியம் வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி ஆசிரியை சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2015

ஊதியம் வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி ஆசிரியை சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு


சிவகங்கை அருகே அரசுப் பள்ளியில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஆசிரியை தனக்கு சம்பளம் வழங்க உத்தரவிடுமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளார்.
இது குறித்து, மாற்றுத் திறனாளி ஆசிரியை மணிமேகலை அம்மனுவில் தெரிவித்திருப்பது:

சிவகங்கை மாவட்டம், அ. முறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறேன். மாற்றுத் திறனாளியான தனக்கு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் தணிக்கை தடை எனக் கூறி ஊதியம்வழங்காமல் தலைமை ஆசிரியர் நிறுத்தி வைத்துள்ளார்.

இது தொடர்பாக, பல முறை உரிய ஆவணங்களுடன் முறையீடு செய்தும் பயனில்லை. இதனால்,குடும்பத்தை நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறேன். மேலும், எனது குழந்தைகள் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனது ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.மணிமேகலையுடன், தமிழக தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலர் இளங்கோ, மாவட்டச் செயலர் நாகேந்திரன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.இது சம்பந்தமாக, பள்ளிக் கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பதில் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி