அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), மே 16,17 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ.-எம்.டெக். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2015-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மே 16-ஆம் தேதியும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு மே 17-ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
சென்னை, கோவை, சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம்,விருதுநகர் ஆகிய நகரங்களில் பல்வேறு தேர்வு மையங்களிலம் மொத்தம் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்.சனிக்கிழமை (மே 16) காலை 10 முதல் 12 மணி வரை எம்சிஏ பிடிப்புக்கும்,பிற்பகல் 2.30 முதல் 4.30 வரை எம்பிஏ படிப்புக்கும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்பிளான் படிப்புகளுக்கு மே 17- ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி