பி.இ.: 1.70 லட்சம்; எம்.பி.பி.எஸ்.: 27,125 விண்ணப்பங்கள் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2015

பி.இ.: 1.70 லட்சம்; எம்.பி.பி.எஸ்.: 27,125 விண்ணப்பங்கள் விநியோகம்


பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இதுவரை 1.70 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.2015-16 கல்வியாண்டில் பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 60 மையங்களில் வெள்ளிக்கிழமை (மே 15) வரை 1.70 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ்.: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த மே 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாள்களில் மொத்தம் 27,125 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி